Sri Ramaswamy Temple / அருள்மிகு ராமசாமி திருக்கோவில்

Sarangapani South Street,
Valayapettai Agraharam,
Kumbakonam, Tamil Nadu 612001


The temple has beautiful architecture pieces and has been built by the Nayakkar kings during the 16th century. Govinda Dikshitar, the prime minister of the Nayaks, constructed the temple. He added a commercial corridor between his new temple and the older Chakrapani temple.

The temple has a 3-tiered gopuram surrounded by walls. The central shrine houses the image of Rama in a seated posture with his consort Sita. The other images are of his brothers Lakshmana, Bharatha and Chatruguna in standing posture and Hanuman in worship posture. The sixty four pillars in the hall near the gopuram are sculpted with exquisite finesse depicting various episodes of the epic Ramayana. Each pillar is carved out of a single stone and the delicacy is very prominent. Rama in the temple is depicted with Vyakarna Mudra, while Hanuman is depicted holding manuscripts. The other important aspects of the epic like coronation of Vibishana, coronation of Sugriva, relieving Agalya from her curse and Hanuman playing veena. The temple is atytpical of Nayak style of temples.

சக்ரபாணி தெரு,
வலையப்பேட்டை அக்ரஹாரம், கும்பகோணம் – 612001.

ராமனுக்கு தனிக்கோயில் பல ஊர்களில் இருக்கிறது. பரதனுக்கு தனிக்கோயில் கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ளது. ஆனால், ராம சகோதரர்கள் நால்வரும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் சேர்ந்து காட்சி தருகின்றனர். இதில் கும்பகோணம் ராமசுவாமி கோயிலும் ஒன்று. கோஷ்டத்தில் (சுற்றுச்சுவரில்) விநாயகரும், பூவராகசுவாமியும் உள்ளனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சன்னதியும் இங்கு உள்ளது. ராமாயண காட்சிகள் மூலிகையால் வரையப்பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் இக்கோயிலைக் கட்டினார்.

அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி, என்றும் தியாக மனப்பான் மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர். அது மட்டுமல்ல, ஒரே ஆசனத்தில் ராமனும் சீதையும் அமர்ந்திருப்பர். மற்ற கோயில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும். ராமனின் இடதுபுறம் சத்ருக்கனன், வலதுபுறம் பரதன் மற்றும் அனுமானைக் காணலாம். லட்சுமணன் வழக்கம் போல் வில்லுடன் இருக்கிறார். வீணையுடன் ஆஞ்சநேயர்: அனுமானைக் கதாயுதத்துடன் தான் எங்கும் காண முடியும். இங்கோ அனுமான் தனது போர்க்குணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, ராமனின் காது குளிர வீணாகானம் மீட்டிக் கொண்டிருக்கிறார். கல்வியில் வல்லவரான அனுமான், இசையிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இக்காட்சி உள்ளது. மற்றொரு கையில் ராமாயண காவியத்தை வைத்துள்ளார். ராமாயணத்தை வீணை மீட்டி பாடுவதாக ஐதீகம். ஜெகம் புகழும் புண்ணியக் கதையான ராமாயணத்தை ஆஞ்சநேயர் இங்கே பாடி மகிழும் காட்சியை கண் குளிரக் காணலாம். பரதன் ராமனுக்கு குடை பிடிக்க, சத்ருக்கனன் சாமரம் வீச நிற்கும் காட்சிகள் அற்புதத்திலும் அற்புதம். ராம பக்தர்களின் உடலைப் புல்லரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த அரிய கோயில் இது.