History - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
  • History / வரலாறு

    In the ethic period of Ramayana the son of Ravana, Mehanathan came here after the defitent by Lord Rama, he pray the MahaPrathiyangara Devi to get success in the war with rama, he trying to conduct the spritual way of "Nigumbalayagam". In the way NigumbalaYagam, he selected this ayyavadi the ancient place of mahaPrathiyangaradevi, and prepare for the yaga he came from the MayaviRupam, as per their way he fixing the eight directions of this place by Mayanam [Martual Yards] with firing of human bodies. This message was conveyed by the Ravana's brother Vibhisanar to Rama, That he may fulfill the yagam, no one can defededMehanathan, with the advise of Vibhisanar Shree Rama came here and pray goddess and the performed the yagam before the mehanathan's arrival. It is mentioned in the vedhas that her birth is from the netrikan [Third eye of sivan] of the Sarabheswarar [the sivan'savatharam of the lion with bird wings]. At her time of incarnation she was having thousand faces of lion, two thousand hands, three reddish eyes, black hefty body structure, long and broad neck, sharp tiger nails, wearing blue dress and mundamaalai [Garlend of human skulls 108]. In the epic period of Ramayana, the son of Ravana, Mehanathan after his battle against Lakshmana went to Guru Sukaracharaya to get his blessings to be victorious against Lord Rama. Guru Sukaracharaya advised him to perform "NigumbalaYagam" in a place surrounded by cremation ground in all 8 directions. Ayyavadi was the only conducive place to perform this yaga. Subsequently when Mehanathan conducted the Yagam, devi didn’t present herself before him. The next day in the Yudhabhomi, Devi presented herself before the death of Mehanathan and explained him that she was satisfied with his yaga but she when it comes to a battle between “good Vs evil” she cannot help the “evil” defeat “good”. But being impressed with his devotion she bestowed him with the title "Indhirajith" and sent him to IndhiraLoham. During MahaBharatha period, the pandavas conducted the NigumbalaYagam in this place to redeem their kingdom. As Panchpandavas performed the pooja together this place is named as “AyverPaadi” (“Ayver” in Tamil means “five” and “Paadi” in Tamil means “praised”)and later came to be known as Ayyavadi. Pandavas planted a banyan tree which is even now worshipped as the Temple's "SthalaViruksha". Even now one can observe the banyan tree having unique five different leaves which is seen only in this temple. This Temple was praised by ThiruganaSambanthaNayanmar in his "ThiruKovai". The Devi fought with Narasimham [the avatharam of magha Vishnu] and destroyed. At that time she was named as "UgraPrathiyangara". Subsequently, the devas and rishis prayed & performed rituals for calming her down. Then she got the name of "Shri MahaPrityangira". திரேதாயுகத்தில்ராம, ராவணயுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ராவணகுமாரன் இந்திரஜித் (மேகநாதன்) யுத்தத்தில் லட்சுமணனுடன் போரிட்டுகளைப் படைந்து இறுதியாக நாகாஸ்த்திரத்தை பிரயோகித்து வெளியேறுகிறான். பின்பு யுத்தத்தில் வெற்றி பெற வேண்டி குலகுருசுக்ராச்சாரியாரை அணுக, அவர் எட்டுதிக்கும் மயானங்களால் சூழப்பட்டஇடத்தில் "நிகும்பலாயாகம்" செய்தால் வெற்றிபெறலாம் என்றுகூறினார். அந்த இடம் இந்த ஐவர்பாடிதான். அங்கு அகஸ்தியரால் பூஜிக்கப்பட்ட சிவன்கோவில் உள்ளது. அதன் அருகில் மகா பிரத்தியங்கரா தேவியை ஸ்தாபித்துயாகத்தை நடத்து என்றுகூற, அவனும் அவ்வாறே செய்தான். அவன் யாகத்தில் அம்பாள் தோன்றியாகத்துக்கு மகிழ்ந்தேன். ஆனால், தர்மத்துக்கு எதிராக நீயுத்தம் செய்கிறாய் அதனால் நான் உன் எண்ணத்தை நிறைவேற்ற முடியாது என்று கூறிமறைந்துவிடுகிறாள். அதன்பிறகு துவாபரயுகத்தில் பஞ்சபாண்டவர்கள் இத்தலத்தை அடைந்து அம்பாளை வணங்கி அருள் பெற்றனர். அதன்காரணமாக இவ்வூர் "ஐவர்பா டி" என்று பெயர் பெற்றது. அவர்களால் நடப்பட்ட ஆலமரம் இன்றும் ஆலயத்தின் ஸ்தலவிருட்சமாக உள்ளது. அம்மரத்தில் இலைகள் ஐந்து விதமாக இருப்பதை இன்றும் காணலாம். "ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் இருக்கும் அதிசயத்தை உலகில்வேறு எங்கும் காண முடியாது" முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்மாவதாரம் எடுத்து இரண்யனைவதம் செய்த போது அவரது கோபம் தணியாமல் உக்ரநரசிம்மராக அண்டங்களை பெயர்த்து பந்தாடினார். அனைத்து தேவர்களும் சிவபெருமானிடம் சரணடைய, சிவபெருமான் சிம்மத்தின் உடலும், மனிதமுகமும், இரண்டு இறக்கைகளுடனும் தோற்றமெடுக்கிறார். சூலினிதுர்க்கை, மகாபிரத்தியங்கராதேவி இருவரும் இரு இறக்கைகளாக,சிவபெருமான் சரபேஸ்வரர் அவதாரமெடுத்து நரசிம்மரின் உக்ரத்தை தணித்து சாந்தம் அடையச்செய்தார். ஆங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற இருமுனிவர்கள் அம்பாளை நோக்கி உக்ரதவமிருந்து, அம்பாளின் சக்தி பூலோகத்திற்கு கிடைக்க செய்தனர். அந்த சக்திதான் இன்றும் ஐவர்பாடியில் கொலு வீற்றிருக்கும் மகாபிரத்தியங்கராதேவி. 18 கைகளுடன் சிம்மமுகமும் மனித உடலும் கொண்டு, நான்கு சிம்மங்கள் பூட்டியரதத்தில் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்குஅருள்பாலிக்கிறார். இப்படிபலயுகங்கள் பெருமைவாய்ந்த ஆலயங்கள் சில. அவற்றில் ஐவர்பாடியும் ஒன்று. இத்தலத்தில்அம்பாளை வணங்கியாகம் செய்தால், இப்பிறவியிலும் பூர்வஜென்மங்களிலும் செய்தபாவங்கள் நீங்கி, இம்மையிலும், மறுமையிலும் நன்மையடையலாம். இந்த அம்பாளுக்கு அர்ச்சனை, அபிஷேகங்கள் கிடையாது. மாதம் ஒருமுறை அம்பாளுக்கு புனுகு மற்றும் மூலிகை கலவை சாத்தப்படுகிறது.

You don't have permission to register