Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  NSRS Mutt - Kumbakonam  >  Near by Places
  • Adi Kumbeswarar Temple / அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோவில்

    Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001 Adi Kumbeswarar Temple is a Hindu temple dedicated to the deity Shiva, located in the town of Kumbakonam in Tamil Nadu, India. Shiva is worshiped as Adi Kumbeswarar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Mangalambigai Amman. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the Nayanmars and classified as Paadal Petra Sthalam. The temple complex covers an area of 30,181 sq ft (2,803.9 m2) and houses four gateway towers known as gopurams. The tallest is the eastern tower, with 11 stories and a height of 128 feet (39 m) The temple has numerous shrines, with those of Kumbeswarar and Mangalambigai Amman being the most prominent. The temple complex houses many halls; the most notable is the sixteen-pillared hall built during the Vijayanagar period that has all the 27 stars and 12 zodiacs sculpted in a single stone. The temple has six daily rituals at various times from 5:30 a.m. to 9 p.m., and twelve yearly festivals on its calendar, with the Masi Magam festival celebrated during the Tamil month of Maasi (February - March) being the most prominent. The present masonry structure was built during the Chola dynasty in the 9th century, while later expansions are attributed to Vijayanagar rulers of the Thanjavur Nayaks of the 16th century. The temple is maintained and administered by the Hindu Religious and Charitable Endowments Department of the Government of Tamil Nadu. கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் -612 001. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 89 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடம் ஆகும். நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோயில்களில் சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது. இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடுவர். நவகன்னியரான நதிகள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும். மங்கள நாயகி: இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள்.அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். மகாமக தீர்த்தம்: ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. இங்கு தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது தான் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதாக ஐதீகம். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும், அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறுமுகம், ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என கூறப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். சிவபெருமான் வேடர் வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராதமூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • Sri Sarangapani Swamy Temple / அருள்மிகு சாரங்கபாணி சுவாமி கோவில்

    Valayapettai Agraharam, Kumbakonam, Thanjavur, Tamil Nadu 612001 Sarangapani Temple is a Hindu temple dedicated to Vishnu, located in Kumbakonam, Tamil Nadu, India. It is one of the Divya Desams, the 108 temples of Vishnu revered in Nalayira Divya Prabandham by the 12 poet saints, or Alwars. This temple is along Kaveri and is one of the Pancharanga Kshetrams. The temple is believed to be of significant antiquity with contributions at different times from Medieval Cholas, Vijayanagar Empire and Madurai Nayaks. The temple is enshrined within a huge granite wall and the complex contains all the shrines and the water bodies of the temple. The rajagopuram (the main gateway) has eleven tiers and has a height of 173 ft (53 m). The Potramarai tank, the temple tank, is located opposite to the western entrance of the temple. Sarangapani is believed to have appeared for sage Hemarishi. The temple has six daily rituals at various times from 5:30 a.m. to 9 p.m., and twelve yearly festivals on its calendar. The temple chariot festival is the most prominent festival of the temple, celebrated during the Tamil month of Chittirai (March–April). The twin temple chariots are the third largest in Tamil Nadu, each weighing 300 t (660,000 lb). கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் – 612001. சுவாமி : அருள்மிகு சாரங்கபாணி சுவாமி. அம்பாள் : அருள்மிகு கோமளவல்லி. மூர்த்தி : ஆராவமுதன். தீர்த்தம் : பொற்றாமரைத் திருக்குளம்,காவிரி. தலச்சிறப்பு : 108 திவ்ய தேசங்களில் இது 12வது திவ்ய தேசமாகும். ஹோம மகரிசியின் மகளாக வளர்ந்து கொண்டிருந்த லக்ஷ்மியை இத்தலத்திற்கு மகர சங்கராந்தியன்று, வைதீக விமானத்துடன் கையில் சாரங்கம் என்னும் வில்லுடன் வந்து இறங்கிய திருமால் மணந்து கொண்டு அர்ச்சாரூபியானார். ராமபிரானிடம் வீடணன் பெற்று வந்த ஆராதனா விக்ரகம், திருவரங்கத்தில் பிராணா வாக்ருதி என்னும் விமானத்துடன் பள்ளி கொண்டு விட, வைதீக விமானத்துடன் சாரங்கபாணியாக குடந்தையிலும் அரச்சாரூபியாகி அருள்புரிந்தார். உபயபிரதான திவ்யதேசம் என்னும் சிறப்புடைய தலம்.

  • Sri Ramaswamy Temple / அருள்மிகு ராமசாமி திருக்கோவில்

    Sarangapani South Street, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001 The temple has beautiful architecture pieces and has been built by the Nayakkar kings during the 16th century. Govinda Dikshitar, the prime minister of the Nayaks, constructed the temple. He added a commercial corridor between his new temple and the older Chakrapani temple. The temple has a 3-tiered gopuram surrounded by walls. The central shrine houses the image of Rama in a seated posture with his consort Sita. The other images are of his brothers Lakshmana, Bharatha and Chatruguna in standing posture and Hanuman in worship posture. The sixty four pillars in the hall near the gopuram are sculpted with exquisite finesse depicting various episodes of the epic Ramayana. Each pillar is carved out of a single stone and the delicacy is very prominent. Rama in the temple is depicted with Vyakarna Mudra, while Hanuman is depicted holding manuscripts. The other important aspects of the epic like coronation of Vibishana, coronation of Sugriva, relieving Agalya from her curse and Hanuman playing veena. The temple is atytpical of Nayak style of temples. சக்ரபாணி தெரு, வலையப்பேட்டை அக்ரஹாரம், கும்பகோணம் – 612001. ராமனுக்கு தனிக்கோயில் பல ஊர்களில் இருக்கிறது. பரதனுக்கு தனிக்கோயில் கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ளது. ஆனால், ராம சகோதரர்கள் நால்வரும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் சேர்ந்து காட்சி தருகின்றனர். இதில் கும்பகோணம் ராமசுவாமி கோயிலும் ஒன்று. கோஷ்டத்தில் (சுற்றுச்சுவரில்) விநாயகரும், பூவராகசுவாமியும் உள்ளனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சன்னதியும் இங்கு உள்ளது. ராமாயண காட்சிகள் மூலிகையால் வரையப்பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் இக்கோயிலைக் கட்டினார். அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி, என்றும் தியாக மனப்பான் மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர். அது மட்டுமல்ல, ஒரே ஆசனத்தில் ராமனும் சீதையும் அமர்ந்திருப்பர். மற்ற கோயில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும். ராமனின் இடதுபுறம் சத்ருக்கனன், வலதுபுறம் பரதன் மற்றும் அனுமானைக் காணலாம். லட்சுமணன் வழக்கம் போல் வில்லுடன் இருக்கிறார். வீணையுடன் ஆஞ்சநேயர்: அனுமானைக் கதாயுதத்துடன் தான் எங்கும் காண முடியும். இங்கோ அனுமான் தனது போர்க்குணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, ராமனின் காது குளிர வீணாகானம் மீட்டிக் கொண்டிருக்கிறார். கல்வியில் வல்லவரான அனுமான், இசையிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இக்காட்சி உள்ளது. மற்றொரு கையில் ராமாயண காவியத்தை வைத்துள்ளார். ராமாயணத்தை வீணை மீட்டி பாடுவதாக ஐதீகம். ஜெகம் புகழும் புண்ணியக் கதையான ராமாயணத்தை ஆஞ்சநேயர் இங்கே பாடி மகிழும் காட்சியை கண் குளிரக் காணலாம். பரதன் ராமனுக்கு குடை பிடிக்க, சத்ருக்கனன் சாமரம் வீச நிற்கும் காட்சிகள் அற்புதத்திலும் அற்புதம். ராம பக்தர்களின் உடலைப் புல்லரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த அரிய கோயில் இது.

  • Chakrapani Temple / அருள்மிகு சக்கரபாணி திருக்கோவில்

    Chakrapani Sannathi Street, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001 Chakrapani Temple is a Hindu temple dedicated to Vishnu located in Kumbakonam, Tamil Nadu, India. This temple is located 2 km, away towards North West from the Kumbakonam Railway Station. Vishnu appears in the form of a discus or Chakra to put down the pride of Surya(the Sun), who subsequently became his devotee. Like Shiva, Lord Chakrapani has a third eye on His forehead. The temple is one of the most prominent temples in Kumbakonam. As per Hindu legend, Chakra (also called Sudarshana), the discus, is the most powerful weapon of god Vishnu. He once sent his weapon to nether world to kill king Jalandasura. The weapon is believed to have come out of the nether world through river Kaveri. God Brahma, who was taking bath in the river, got impressed and installed the image of Sudarshana in the place where the temple is now located. Surya, the Sun god, who was glowing in brilliance, had his brightness diminished by the effulgent Sudarshana. Surya worshipped Sudarshana and pleased by his devotion, Sudarshana restored all the powers of Surya. Vishnu attained the name Chakrapani from then on. Surya wanted the town to be named after him and pleased by his devotion, Chakrapani named the city as Bhaskara Kshetra. It is believed that Surya worshiped Chakrathazhwar during Masi Magam and every year Masi Magam festival is celebrated during the day, commemorating the event. The temple car is drawn around the streets of the temple during the day. As per another legend, during the great deluge, the pot of nectar came down swirling. The pot of nectar fell down into different pieces as Shiva shot his arrow at the pot. The nectar is believed to have relieved lives in the planet. As per Sarma Sastrigal, the various places where the nectar spilled are Kumbeswara Temple, Sarangapani Temple, Chakrapani Temple, Nageswaran Temple, Someswaran Temple, Abhimukeswarar Temple, Kasi Viswanathar Temple, Kumbakonam, Kambatta Viswanathar, Gauthameswarar Temple, Banapuriswarar Temple, Varaha Perumal temple, Lakshminarayana and Varadaraja. சக்ரபாணி சன்னதி தெரு, கும்பகோணம் – 612001. இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சக்கரபாணி சன்னதியின் வடபுறம் விஜயவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இவர்களைத்த விர தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோரும் காட்சியளிக்கின்றனர். ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்க பாணி சுவாமியால் அனுப்பப்பட்ட திருச்சக்கரம் பாதாள உலகத்தில் இருந்த அசுரர்களை அழித்து காவிரியில் பூமியை பிளந்துகொண்டு வெளிக்கிளம்பி வந்தது. புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது.மகிழ்ச்சி அடைந்த பிரம்மன் ஸ்ரீசக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான் இந்த சக்கரம் சூரியனை விட அதிக ஒளிமிக்கதாக இருந்தது. இதனால் சூரியன் பொறாமை கொண்டான். தன்னைவிட ஒருவன் அதிகமாக ஒளிர்வதா என்ற ஆவேசத்தில் தனது ஒளியை மேலும் கூட்டினான். உடனே சக்கரம் அவனது ஒளியையும் பறித்து தன்னுள் அடக்கிகொண்டது. சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்ற வனாகவும் ஆனான். ஒளியிழந்த சூரியன் தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க ஸ்ரீசக்கரத்தை சரணடைந்தான். வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னிமயமான கேசத்துடனும் ஸ்ரீசக்கரராஜன் அருட்காட்சி தத்தார். சூரிய னுக்கு ஒளி கிடைத்தது. இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோயில் கட்டினான் சூரியன்.

  • Thenupuriswarar Temple / அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்

    Patteeswaram, Kumbakonam, Tamil Nadu 612703 Patteeswaram is a village, eight kilometres from Kumbakonam in the state of Tamil Nadu in India. The village was named after Patti (also called Nandini), the calf of Kamadhenu, the divine cow in Hindu mythology. The temple of Patteeswarar presents a magnificent sight with five gopurams and three prakarams. It measures 650 feet (200 m) east to west and 295 feet (90 m) south to north. Pattisvara, the presiding form of Shiva manifests himself in the form of Linga, in the central mandapa of the first prakaram. Subsidiary deities like Sapthamatha, Mahalakshmi, Renuka, Navagraha, Surya, Chandra and Bhairava are housed in the inner parts of the temple. Ganesha is represented at three different places in three different forms - Anugai Pillayar, Madhavarna Pillayar and Swarna Vinayagar. In the northern part of the first prakaram, the consort goddess Gnanambigai (Parvati) lies in a separate shrine. A sculpture of Parvati doing penance is also found inside the temple. பட்டீஸ்வரம், கும்பகோணம் – 612703. பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம். இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன்,இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும். மாமன்னன் இராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை இவளே. ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டீசுவரத்தின் வடபுறம் அமைந்திருந்த சோழன் மாளிகையில் சோழ மன்னர்களின் அரண்மனைக் காவல் தெய்வமாக அருள் பாலித்து வந்த தெய்வம். அரண்மனையின் வாயில்களில் முறையே விநாயகரும் முருகரும் பைரவரும் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர். சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள் வாக்கு பெற்ற பின்னரே செயல்படுவர். சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் துர்க்கையம்மனை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த துர்க்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபியாக இருக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபாயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறாள். திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது: திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார். அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன. வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது. ஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது. காமதேனுப்பசுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீச்சரம் என்று பெயர் ஏற்பட்டது.

You don't have permission to register