Sri Varadharaja Perumal Temple – Kumbakonam

There is a popular slogan addressed to Guru – Teacher seeking wisdom running. Guru Brahma Gurur Vishnu, Gurur Devo Maheswarah Guru Sakshath Param Brahma Thasmai Sri Gurave Namah covering the three Lords. There are many stories about Brahma, that he took the form of a swan to find the head of Lord Shiva but failed. To hide the defeat, He lied that she had seen Shiva’s head. Also, as Mother parvati mistook Brahma for Shiva as both had five heads then, to avoid, the confusion, one head of Brahma was removed reducing to four. Thus, worship of Brahma was discontinued. But according to philosophy, one born should finally reach the Creator Himself. Brahma is the Creator and also He is the one protecting the Vedas by chanting them by His four tongues. He enjoys His own importance in the scriptures. Among the few such temples dedicated to Him, the Brahma temple in Kumbakonam is one. He graces here the devotees with His consorts Mothers
Saraswathi and Gayatri.

ஸ்தல பெருமை: குருர் பிரஹ்மா! குருர் விஷ்ணு! குருர் – தேவா மஹேச்வர குருஸ்- ஸாஷத் பரம் பிரஹ்மா! தஸ்மை ஸ்ரீ குரவே நம இந்த ஸ்லோகம் குருவுக்குரியதாகக் கருதப் பட்டாலும், மூம்மூர்த்திகளும் வணக்கம் செலுத்துவதாக உள்ளது. முதல் மூர்த்தியான படைக்கும் கடவுள் பிரம்மாவுக்கே இந்த ஸ்லோகத்தில் முதல் வணக்கம் சொல்லப்படுகிறது. பிரம்மா சிவனின் தலைமுடியைப் பார்க்க அன்ன வடிவெடுத்து பறந்ததாகவும், அம்முயற்சியில் தோற்றதால் பார்த்து விட்டதாக பொய் சொன்னதாகவும் ஒரு கதை உண்டு இதே போல், பிரம்மா சிவனை வணங்க வந்த பொது, அவரது பக்தியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாகவும், அதனால் அவரது ஒரு தலை சிவனால் கிள்ளப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.இதன் காரணமாக பிரம்மாவுக்கு வழிபாடு நின்றுவிட்டது ஆனால்,நான்கு வேதங்களையும் நான்கு வாயால் உச்சரித்துக் காப்பவர் பிரம்மா படைத்தவரையே மீண்டும் சென்றடைய வேண்டும் என்பது ஆன்மிகத்துவம். அந்த வகையில் படைத்த பிரம்மனையே மீண்டும் நாம் அடையவேண்டும் என்ற அடிப்படையில் பிரம்மன் வழிபாடும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, பிரம்மனுக்கும் சில கோவில்கள் அமைந்தன. இந்த வகையில், கும்பகோணத்திலுள்ள பிரம்மன் கோவிலில் சரஸ்வதி, காயத்திரி ஆகிய தனது தேவியருடன் அவர் அருள் செய்கிறார்.