Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  NSRS Mutt - Srirangam  >  Near by Places
  • Sri Ranganathaswamy Temple / அருகிலுள்ளவை

    Sriramapuram, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006 The Sri Ranganathaswamy Temple or Thiruvarangam is a Hindu temple dedicated to Ranganatha, a reclining form of the Hindu deity Vishnu, located in Srirangam, Tiruchirapalli, Tamil Nadu, India . Constructed in the Tamil style of architecture, this temple is glorified in the Thiviya Pirabandham, the early medieval Tamil literature canon of the Alvar saints from the 6th to 9th centuries AD and is counted among the 108 Divya Desams dedicated to Vishnu. The temple follows Thenkalai tradition of worship. It is one of the most illustrious Vaishnava temples in South India rich in legend and history. Its location, on an island in Cauvery river, has rendered it vulnerable to natural disasters as well as the rampaging of invading armies – Muslim and European – which repeatedly commandeered the site for military encampment. The main entrance, known as the Rajagopuram (the royal temple tower), rises from the base area of around 13 cents (around 5720 sq ft) and goes up to 237 feet (72 m), moving up in eleven progressively smaller tiers. The annual 21-day festival conducted during the Tamil month of Margazhi (December–January) attracts 1 million visitors. Srirangam temple is often listed as the largest functioning Hindu temple in the world, the still larger Angkor Wat being the largest existing temple. The temple occupies an area of 156 acres (631,000 m²) with a perimeter of 4,116m (10,710 feet) making it the largest temple in India and one of the largest religious complexes in the world. ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் ஸ்ரீராம்புரம், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620006 ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் அல்லது திருவரங்கம் ஒரு இந்து கோவில், இது ரங்கநாதருக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது, இங்கு இந்துக் கடவுள் விஷ்ணு படுத்திருக்கும் வடிவத்தில் காட்சி தருகிறார். இந்தக் கோவில் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது, இந்தக் கோவில் ஆரம்பகால இடைக்கால தமிழ் இலக்கியமான திவ்வியப் பிரபந்தத்தில் புகழப்பட்டுள்ளது, இது கி.பி 6ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரையிலான ஆழ்வார்களால் எழுதப்பட்டுள்ளது, இது 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகும், இது விஷ்ணுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் தென்கலை வழிபாட்டு மரபினை பின்பற்றுகிறது. தென்னிந்தியாவில் புராணக்கதைகள் மற்றும் வரலாறு அதிகமுள்ள மிகவும் புகழ்பெற்ற வைஷ்ணவ கோவில்களில் இது ஒன்றாகும். இதன் அமைவிடம், காவேரி ஆற்றில் உள்ள ஒரு தீவு, இயற்கை பேரழிவுகளால் எளிதில் அழிவினை சந்திக்கும் இடமாகவும், அதேபோன்று இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய இராணுவங்கள் படையெடுத்து தாக்கிய இடமாகவும் – இராணுவவீரர்களின் கூடாரத்திற்காவும் இந்த இடம் கைப்பற்றப்பட்டுள்ளது. இராஜ கோபுரம் என்று அழைக்கப்படுகிற முதன்மை நுழைவாயிலின் அடித்தளம் 13 சென்ட் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ளது (சுமாராக 5720 சதுர அடி), 237 அடி உயரம் வரை செல்கிறது (72 மீட்டர்) தொடர்ச்சியாக பதினொன்று சிறு சிறு அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. மார்கழி மாதத்தில் (டிசம்பர் – ஜனவரி) கொண்டாடப்படும் 21 நாள் ஆண்டு திருவிழாவிற்கு 1 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள். அங்கர் வாட் கோவில் மிகப்பெரியதாக இருந்தபோதிலும் ஸ்ரீரங்கம் கோவில் உலகத்திலேயே செயல்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய இந்து கோவில்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இது 156 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது (631,000மீ2 ), இதன் சுற்றளவு 4,116 மீ (10,710 அடி). இது இந்தியாவின் மிகப்பெரிய கோவிலாகவும், உலகத்திலேயே மிகப்பெரிய சமயம் சார்ந்த கட்டடமாகவும் இருக்கிறது.

  • Rock Fort Temple / மலைக் கோட்டை கோவில்

    Big Bazaar St, Teppakulam, Tiruchirappalli, Tamil Nadu 620002 Ucchi Pillayar koil is a 7th-century Hindu temple, one dedicated to Lord Ganesh located a top of Rockfort, Trichy, Tamil Nadu, India. Mythologically this rock is the place where Lord Ganesh ran from King Vibishana, after establishing the Ranganathaswamy deity in Srirangam. The Rock Fort temple stands 83m tall perched atop the rock. The smooth rock was first cut by the Pallavas but it was the Nayaks of Madurai who completed both the temples under the Vijayanagara empire. The temple is situated at the top of the rock. The temple is mystic in its nature with an awe-inspiring rock architecture. The Ganesh temple is much smaller with an access through steep steps carved on the rock and provides a stunning view of Trichy, Srirangam and the rivers Kaveri and Kollidam. Due to its ancient and impressive architecture created by the Pallavas, the temple is maintained by the Archaeological department of India. பெரியக்கடை வீதி, தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620002 உச்சிப் பிள்ளையார் கோவில் ஒரு ஏழாம் நூற்றாண்டு இந்து கோவில் ஆகும், இது கணேச கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டதாகும், இது திருச்சி மலைக்கோட்டை உச்சியில் அமைந்துள்ளது. புராணங்களின்படி, ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதசுவாமி கடவுளை நிறுவிய பிறகு, கணேச கடவுள் விபீஷ்ண அரசரிடமிருந்து ஓடிய பாறையாகும். மலைக்கோட்டை கோவில் பாறையின் உச்சியில் 83 மீ உயரத்தில் அமைந்துள்ளது. மென்மையான பாறைகள் முதலில் பல்லவர்களால் செதுக்கப்பட்டது, ஆனால் இரண்டு கோவில்களும் மதுரை நாயக்கர்களால் விஜயநகர பேரரசின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது. பல்லவர்களால் உருவாக்கப்பட்டதினாலும், தொன்மை மற்றும் கவர்ச்சிகரமான கட்டடக்கலையின் காரணமாகவும் இது இந்திய தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படுகிறது.

  • Jambukeswarar Temple / ஜம்புகேஷ்வரர் கோவில்

    Sannathi St, Thiruvanaikoil, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620005 Thiruvanaikaval (also known as Jambukeswaram) is a famous Shiva temple in Tiruchirapalli (Trichy), in the state of Tamil Nadu, India. The temple was built by Kocengannan (Kochenga Chola), one of the Early Cholas, around 1,800 years ago. It is located in the Srirangam island, which has the famous Ranganathaswamy temple. Thiruvanaikal is one of the five major Shiva Temples of Tamil Nadu (Panchabhoota Sthalams) representing the Mahābhūta or five great elements; this temple represents the element of water, or neer in Tamil. The sanctum of Jambukeswara has an underground water stream and in spite of pumping water out, it is always filled with water. It is one of the 275 Paadal Petra Sthalams, where all the four most revered Nayanars (Saivite Saints) have sung glories of the deity in this temple. The temple has inscriptions from the Chola period. சன்னதி தெரு, திருவானைக்காவல் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 620005 தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) திருவானைக்காவலில் (ஜம்புகேஷ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,800 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால சோழர்களில் ஒருவர் கோசெங்கனால் கட்டப்பட்டது (கோசெங்க சோழன்). திருவானைக்காவல் தமிழ்நாட்டிலுள்ள ஐந்து முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாகும் (பஞ்சபூத ஸ்தலம்), இது மகாபூதம் அல்லது ஐந்து இயற்கை சக்திகளை குறிப்பிடுகிறது; இந்தக் கோவில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீரினை (தமிழில்) குறிக்கிறது. ஜம்புகேஷ்வரர் கர்பகிரகம் நிலத்தடி நீர் ஓடையை கொண்டுள்ளது, நீரினை இயந்திரத்தினால் வெளியேற்றிய பிறகும் கூட இது எப்போதும் நீரால் நிரம்பிவிடுகிறது. 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும், இதில் உயர்வாய் போற்றத்தக்க நான்கு நாயனார்களும் இந்த கோவிலின் கடவுளின் புகழை புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். இந்தக் கோவிலி்ல் சோழர் காலத்து கல்வெட்டுகள் இருக்கின்றன.

You don't have permission to register