History - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
  • Sri Chandrasekharendra Saraswati V / ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி

    Kanchi was involved in the Carnatic wars and peaceful existence there had become impossible. Hence the Acharyas of Kamakoti Peetha decided on migrating south though Kanchi still figured as the nominal headquarters. The golden image of Kamakshi (Bangaru Kamakshi) had already been carried away by the sthanikas of the temple first to Udayarpalayam, and later to Thanjavur where it has been permanently installed. The Acharya Chandrasekhara himself acceded to the request of Pratapa Simha, Rajah of Thanjavur (1740-63) and took up his permanent headquarters at Thanjavur. But Kumbakonam, on the banks of the sacred river Kaveri, was found more suitable and shortly thereafter the Acharya shifted to Kumbakonam. Chandrasekhara attained mukti at Kumbakonam on Sukla Prathama in the month of Pushya of the cyclic year Subhakrt (1783 AD). காஞ்சிபுரத்தில் கர்நாடக போர் நடந்தது. ஆகவே அங்கு அமைதியின்மை நிலை நிலவியதால் காமாட்சி பீடத்தினுடைய தலைவர் அந்த இடத்தை விட்டு தென்னிந்தியாவிற்கு இடம்பெயர்ந்தார். ஆனால் காஞ்சிமா நகரமே அதனுடைய தலைநகரமாக இருந்தது. இங்குள்ள தங்க காமாட்சி அம்மனுடைய சிலை உடையார்பாளையத்திற்கு முதல் முதலாக ஸ்தானிகர்களால் கொண்டு செல்லப்பட்டு பிறகு தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள ராஜா பிரதாப் சிங் (1740 – 63) வேண்டுகோளுக்கு இணங்க சந்திர சேகர ஸ்வாமிகள் தஞ்சாவூரை தலைமையகமாக கொண்டார். ஆனால் காவேரி நதிக்கரையில் உள்ள கும்பகோண நகரம் மிகவும் வசதியாக தோன்றியதால் கும்பகோணத்திற்கே தனது தலைமையகத்தை மாற்றிக்கொண்டார். சந்திரசேகர ஸ்வாமிகள் கும்பகோணத்தில் புஷ்ய மாதத்தில் சுக்ல பௌர்ணமி அன்று சுபாக வருடத்தில் 1783 -ல் முக்தி அடைந்தார்.

  • Bangaru Kamakshi Amman Temple / ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் கோவில்

    This temple is administered by the Shankaracharya Mutt of Kanchipuram. In 1780s, the holy city of Kanchipuram was affected by the Carnatic wars -- military conflicts between independent rulers of India,the British and the French. The continuous political instability lead the head of Kanchi mutt, Sri Chandrasekharendra Saraswati Swamigal V, to shift the base of his mutt from Kanchi to some other place. He was invited by Pratap Singh, the King of Thanjavur. In the ensuing invasion by Muslim rulers it was decided to shift the Utsava Muthry (processional idol) of Sri Kamakshi made of solid gold from the Kanchi Kamakshi temple. To avoid detection by the aggressors, the gold idol was smeared with black Punugu (secretion of the civet cat) and covered with a cloth. It was first taken to Udayarpalyam and then to Thanjavur, where it was installed under the protection of King Pratap Singh. The temple came to be known as Bangaru Kamakshi temple of Thanjavur. தஞ்சாவூர் காமாட்சி அம்மன் கோவிலானது காஞ்சியில் உள்ள சங்கராச்சாரியார் மடத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1780 ல் காஞ்சிபுரமானது கர்நாடக போரினால் பாதிக்கப்பட்டதால் ( இந்த போரானது ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும், சுதந்திரமாக ஆண்ட அரசர்களுக்கும் இடையே இந்த போர் நடந்தது.) தொடர்ந்து அரசியல் நிலையின்மை ஏற்பட்டதால் காமகோடி மடத்தினுடைய 5 வது தலைவர் காஞ்சியிலுள்ள தலைமையகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டார். இதனால் தஞ்சை அரசர் ராஜா பிரதாப் சிங் தஞ்சைக்கு வருமாறு அழைத்தார். பிறகு முஸ்லீம் அரசர்கள் நடத்திய சண்டையால் காமாட்சி அம்மன் தங்கத்தால் ஆன உற்சவ விக்ரத்தை அக்கோவிலிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். எதிராலியிடமிருந்து தப்பிக்க இந்த தங்கத்தினால் ஆன இந்த காமாட்சி அம்மன் விக்ரத்தை புனுங்கி, அதை மூடி ஒரு துணியால் சுற்றினார்கள். முதலில் இதனை உடையார் பாளையத்திற்கு எடுத்து சென்றார்கள். பிறகு தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது அங்கே தஞ்சை அரசர் பிரதாப் சிங்கின் பாதுகாப்பில் தஞ்சையில் வைக்கப்பட்டது. இக்கோவில் தான் தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

  • Sthala Mahime / இவ்விடத்தின் மகிமை

    Sri Bangaru Kamakshi in Thanjavur is held in as much reverance as the Kamakshi temple in Kanchi to which the idol originally belonged. The Thanjavur temple is considered to be one of the 51 Shakti Shtals in India. Sri Kamakshi is the incarnation of Sati. According to legend, Sati, daughter of Daksha, could not stand the insults hurled at her husband, Shiva, by her father and sacrificed herself in the sacrificial fire. Shiva was grief-struck and wandered the earth forgetting his duties with Sati’s lifeless body. In order to end his grief and restore order in the world, Vishnu struck Sati’s body which shattered into pieces and fell on different parts of the earth. All those places where the pieces fell were called Shakti Shtals. Sri Kamakshi idol in Thanjavur is in a sitting yogic posture which is considered to signify peace and prosperity. காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலை போன்று தஞ்சாவூரில் காமாட்சி அம்மன் கோவில் மிக பய பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலானது மொத்தம் 51 சக்தி ஸ்தலங்களிலில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த காமாட்சி என்பவள் சதி எனும் உடன்கட்டை ஏறுதலில் முக்கியமானவளாக கருதப்படுகிறது. புராணக்கதைகளின் படி தக்க்ஷனுடைய மகள் சதி ஆவாள். அவள் தனது கணவனுக்கு (சிவன்) தந்தையால் ஏற்பட்ட அவமானத்தினால் தன்னைத்தானே தீயில் எரித்துக்கொண்டாள். சிவன் துக்கத்தினால் பீடிக்கப்பட்டு தனது கடமைகளை மறந்து காமாட்சியின் உடலை எடுத்துக்கொண்டு அலைந்தார். அவருடைய துக்கத்தை போக்கவும், உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும் விஷ்னு பகவான் காமாட்சியின் உடலை கூறுகளாக ஆக்கினார். அந்த ஒவ்வொரு பாதியும் பூமியின் மேல் விழுந்தது. அவ்வாறு விழுந்த ஓவ்வொரு பகுதியும் 51 சக்தி ஸ்தலங்களாக மாறின. தஞ்சாவூரில் உள்ள காமாட்சி சிலை யோக வடிவான முறையில் அமர்ந்த நிலையில் அமைதியையும், வளத்தையும் குறிப்பதாக கருதப்படுகிறது.

  • Sri Jayendra Saraswati Swamigal / ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

    Sri Subramaniyam, born on July 18, 1935 at Irulneekki in Thanjavur District had Veda Adyayanam at Tiruvidaimarudur under the direction of Mahaswamjgal and was initiated into Sanyasa on March 22, 1954 and was declared as successor Acharya and given the Sanyasa name Sri Jayendra Saraswati Sri Pada. In the footsteps of the Mahaswamigal, he too undertook yatra throughout the country. He attracted people from every nook and corner. He intensified the activities of the Mutt to cover new social objectives which included education, health, employment, temple renovation, etc. It is due to his untiring efforts, Kamakoti Peetam established religious and social institutions in many parts of the country. Kamakoti Peetam has now become a beehive of socio-religious renaissance. The King of Nepal erected an arch proclaiming, "Welcome to the only Hindu Kingdom in the world," at the instance of Sri Jayendra Saraswati, in 1988. The only Sankaracharya after the Adi Sankara to visit Manasarovar and Kailash is Sri Jayendra Saraswati Swamigal, in 1998. There he installed the idol of Adi Sankara. He had the unique distinction of being honoured by both Nepal and Chinese Governments. In known recent history, He is the only Sankaracharya to visit Dhaka in Bangladesh in June 2000. In honouring His visit, Sri Dhakeswari Temple named the entrance to the temple as "Sankaracharya Gate". His most notable contribution yet is the founding of the Sri Chandrasekharendra Saraswati Viswa Mahavidyalaya, a Deemed University in the name of his Guru. சுப்ரமணியம் என்பவர் 1935 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தஞ்சாவூரில் உள்ள இருள்நீக்கி என்ற கிராமத்தில் பிறந்தார். திருவிடைமருதூரில் மூத்த சக்ராச்சாரியர் அவர்களால் வேத அத்யாயனம் பெற்றார். 1954 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் சன்யாசம் அளித்தார். காஞ்சி காமகோடி இடத்தில் அடுத்த சுவாமியாக அறிவிக்கப்பட்டு துறவறம் அளிக்கப்பட்டு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயர் சூட்டப்பட்டார். மகா சுவாமிகளுடைய காலடிகளால் நாடு முழுவதும் யாத்திரை செய்தார். மூலை முடுக்கிலிருந்தும் மக்களை கவர்ந்தார். மடத்தினுடைய நடவடிக்கைகளை அதிகப்படுத்தி சமுதாய நோக்கங்களை விரிவுபடுத்தி புதிய சமுதாய கொள்கை படி கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கோவில் சீரமைப்பு முதலியனவற்றை செய்தார். அவருடைய தளராத முயற்சியால் மத சமுதாய அமைப்புகளை புதிதாக ஏற்படுத்தினார். இந்தியாவிலுள்ள அதிக இடங்களில் இந்த அமைப்பை ஏற்படுத்தினார். இதனால் காஞ்சி காமகோடி பீடமானது மத சமுதாய நடவடிக்கைகளில் முன்னுதாரணமாக உள்ளது. நேபாள அரசர் உலகில் உள்ள இந்து சாம்பிராஜ்யத்தின் தலைவரே வருக வருக என வரவேற்பு வலையத்தை கட்டினார், இது 1988 ல் நடந்தது. 1998 ல் ஆதி சங்கரருக்கு அடுத்தபடியாக மான சரோவருக்கும், கைலாயத்திற்கு இவர் விஜயம் செய்தார். அங்கே ஆதி சங்கரருக்கு சிலையை நிறுவினார். நேபாளம் மற்றும் சீன அரசாங்கமும் நூதன முறையில் அவருக்கு மரியாதையை செலுத்தி அவருக்கு தனிப்பட்ட பெருமையை அளித்தார்கள்.சமீப காலத்து சரித்திரங்களில் பங்கலாதேசத்திலுள்ள டாக்காவிற்கு ஜூன் 2000 ல் விஜயம் செய்தார். அவருடைய வருகையை பெருமை படுத்துவதற்காக அங்குள்ள டாக்கேஸ்வரி கோவில் நுழைவாயிலில் சங்கராச்சாரியார் நுழைவாயில் என ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அவருடைய மிக முக்கியமான அன்பளிப்பான சங்கராச்சாரியாருடைய பெயரில் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் விஸ்வ மகா வித்யாலயா என்ற ஒரு பல்கலைக்கழகத்தை தன்னுடைய குருவின் பெயரால் நிறுவியது ஆகும்.

  • Sri Sankara Vijayendra Saraswati Swamigal / ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

    Sri Sankaranarayanan, born on March 18, 1969, Periyapalayam, a village near Arani in Tiruvallore District, was taken as Acharya to the Peetham as Sri Sankara Vijayendra Saraswati, on 29th May 1983, while He was studying at Polur. Under the tutelage of his Guru and Parama Guru, the rare fortune for a Peetathipadi, he also travelled throughout the country including remote places like Meghalaya. He has initiated a number of measures to draw the youth, train them in the socio-religious aspects along with modern education. His keen interest to preserve our ancient literature has brought out many publications through the Mutt in Indian and foreign languages for the benefit of devotees. He has conducted a number of training centres for youth in the name of Bakti Kendra, Dharma Kendra, Karma Kendra, etc, to inculcate in them our values and traditions. திருவள்ளுவர் மாவட்டம் , ஆரணி அருகே உள்ள பெரிய பாளையத்தில் மார்ச் 18 1969 ஆம் வருடம் சங்கர நாராயணன் என்ற பெயரில் அவதரித்தார். இவர் 1983 ஆம் வருடம் மே மாதம் 29 ஆம் நாள் ஒரு ஆச்சாரியார்ராக ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் போரூரில் படித்துக்கொண்டிருந்தார். இவர் குருவும் பரமகுருவும் வழியில் அவருக்கு சங்கராச்சாரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரும் நாடு முழுவதும் விஜயம் செய்து மிகவும் தூரத்திலுள்ள மேகாலயத்திலுள்ள இடங்களுக்கும் விஜயம் செய்தார். இவர் நாட்டு இளைஜர்களை சேகரித்து சமுதாய மதங்களுடைய விசயங்களை பயிற்சி பெற நடவடிக்கைகளை எடுத்தார். பக்தர்களுக்கு பயன் பெரும்படியாக பழங்கால இலக்கியங்களை பாதுகாத்து மடத்தின் மூலமாக பலவித புத்தகங்களை இந்திய மொழியிலும் அந்நிய மொழியிலும் வெளியிட செய்தார். பக்தி கேந்திரா, தர்மா, கர்ம கேந்திரா என்ற பெயரில் இளைஜர்களுக்கு பயிற்சி மையத்தை நம் நாட்டினுடைய பாரம்பரியத்தை ஊட்டும் வகையில் ஏற்படுத்தினார்.

You don't have permission to register