Sri Jagannatha Perumal koil - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt

Sri Jagannatha Perumal koil

About Temple

Lord Perumal took Mother Lakshmi in His hands who was performing penance then facing east. Hence He is facing west. As Mother performed penance in Shenbagaranya region, She is praised as Shenbagavalli. Lord is Jagannathan. The name of the place has in it the name of Lord. Sri Nandhideva, bull vehicle of Lord Shiva went to Vaikunta and in his urge to see Perumal He did not respect the Dwarapalakas. They cursed Nandhi that His body would suffer from excessive heat. When Nandhi informed his Lord Shiva, He advised him to go to Shenbagaranya and perform penance where Mother Mahalakshmi also was in penance on Lord. Perumal granted darshan to Nandhi and named the place Nandhipura Vinnagaram in appreciation of his curiosity to have His darshan ignoring the Dwarapalakas. Lord Jagannathan is holding His weapons sword, bow, discus, dhanda and conch. In early days, Lord was facing east. To accept Mother Mahalakshmi in His Chest and to appreciate emperor Shibi who sacrificed his flesh for the sake of a dove, He turned west then, according to sthala purana. Nandhi and Brahamma are in The Sanctum with Perumal promoting saivan – Vaishnavam Unity.

ஸ்தல பெருமை: கிழக்கு நோக்கி தவம் திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திரு நாமம் “செண்பகவல்லி” ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் “நாதன் கோவில்” என்று ஆனது. நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச்சென்றார், அப்போது காவலுக்கு நின்றவர்களை கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு “எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்” என சாபமிட்டனர்.நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார். நந்தி அதற்கு அவர் “பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசன பெறுவாய்” என்றார் நந்திவர்மன். நந்தியும் அவ்வாரே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவர்க்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால் “நந்திபுர விண்ணகரம்” என தனது தளம் வழங்கப்படும் என்று அருள்பாலித்தார். சந்திரதோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினர். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Review

You don't have permission to register